பாடல் 699
ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற
- தலம்
- கோசைநகர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானதன தானதன தானதன தானதனதானதன தானதனதனதான
பாடல் வரிகள்
ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிறதாலிலையெ னாமதனகலைலீலை
யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதிலாசைமிக வாயடியனலையாமல்
நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமுனானபத மாமலரைநலமாக
நானநுதி னாதினமு மேநினைய வேகிருபைநாடியரு ளேயருளவருவாயே
சீதமதி யாடரவு வேரறுகு மாஇறகுசீதசல மாசடிலபரமேசர்
சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவசீறிவரு மாவசுரர்குலகாலா
கோதைகுற மாதுகுண தேவமட மாதுமிருபாலுமுற வீறிவருகுமரேசா
கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசருவேசமுரு காவமரர்பெருமாளே.
