பாடல் 698
குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை
- தலம்
- திருவான்மியூர்
- ராகம்
- தர்மவதி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (5)தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1தனதான தானதன தனதான தானதனதனதான தானதனதனதான
பாடல் வரிகள்
குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடைகுடிலான ஆல்வயிறுகுழையூடே
குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்குழல்கார தானகுணமிலிமாதர்
புசவாசை யால்மனது உ னைநாடி டாதபடிபுலையேனு லாவிமிகுபுணர்வாகிப்
புகழான பூமிமிசை மடிவாயி றாதவகைபொலிவான பாதமலரருள்வாயே
நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகுநிகழ்பொத மானபரமுருகோனே
நிதிஞான போதமர னிருகாதி லேயுதவுநிபுணாநி சாசரர்கள்குலகாலா
திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணிசிவநாத ராலமயில்அமுதேசர்
திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்திருவான்மி யூர்மருவுபெருமாளே.
