உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 696

நிரைதரு மணியணி யார்ந்த பூரித

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதன தனதன தாந்த தானனதனதன தனதன தாந்த தானனதனதன தனதன தாந்த தானனதனதான

பாடல் வரிகள்

நிரைதரு மணியணி யார்ந்த பூரிதம்ருகமத களபகில் சாந்து சேரியஇளமுலை யுரமிசை தோய்ந்து மாமலரணைமீதே

நெகிழ்தர அரைதுகில் வீழ்ந்து மாமதிமுகம்வெயர் வெழவிழி பாய்ந்து வார்குழையொடுபொர இருகர மேந்து நீள்வளையொலிகூர

விரைமலர் செறிகுழல் சாய்ந்து நூபுரமிசைதர இலவிதழ் மோந்து வாயமுதியல்பொடு பருகிய வாஞ்சை யேதகவியனாடும்

வினையனை யிருவினை யீண்டு மாழ்கடலிடர்படு சுழியிடை தாழ்ந்து போமதியிருகதி பெறஅருள் சேர்ந்து வாழ்வதுமொருநாளே

பரையபி நவைசிவை சாம்ப வீயுமையகிலமு மருளரு ளேய்ந்த கோமளிபயிரவி திரிபுரை யாய்ந்த நூல்மறைசதகோடி

பகவதி யிருசுட ரேந்து காரணிமலைமகள் கவுரிவி தார்ந்த மோகினிபடர்சடை யவனிட நீங்கு றாதவள்தருகோவே

குரைகடல் மறுகிட மூண்ட சூரர்களணிகெட நெடுவரை சாய்ந்து தூளெழமுடுகிய மயில்மிசை யூர்ந்து வேல்விடுமுருகோனே

குலநறை மலரளி சூழ்ந்து லாவியமயிலையி லுறைதரு சேந்த சேவககுகசர வணபவ வாய்ந்த தேவர்கள்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →