பாடல் 692
இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டு
- தலம்
- திருமயிலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தான தந்த தனதனன தான தந்ததனதனன தான தந்ததனதான
பாடல் வரிகள்
இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டுஇருகுழையின் மீத டர்ந்துஅமராடி
இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்தஇருநயனர் வாரி ணங்குமதபாரப்
பணைமுலையின் மீத ணிந்த தரளமணி யார்து லங்குபருவரதி போல வந்தவிலைமானார்
பயிலுநடை யாலு ழன்று அவர்களிட மோக மென்றபடுகுழியி லேம யங்கிவிழலாமோ
கணகணென வீர தண்டை சரணமதி லேவி ளங்ககலபமயில் மேலு கந்தகுமரேசா
கறுவிவரு சூர னங்க மிருபிளவ தாக விண்டுகதறிவிழ வேலெ றிந்தமுருகோனே
மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணிந்தமலையவிலி னாய கன்றன்ஓருபாக
மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்துமயிலைநகர் வாழ வந்தபெருமாளே.
