உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 675

புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்ததனதன தானந் தாத்ததனதான

பாடல் வரிகள்

புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்திபுதுமன மானும் பூட்டியிடையூடே

பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டிபுகல்வழி நாலைந் தாக்கிவருகாயம்

பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டிபசுபதி பாசங் காட்டிபுலமாயப்

படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்திபரகதி தானுங் காட்டியருள்வாயே

சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்கதிருநட மாடுங் கூத்தர்மருகோனே

திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்றஜெகமொடு வானங் காக்கமயிலேறிக்

குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கிகுதர்வடி வேலங் கோட்டுகுமரேசா

குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில்குறமகள் பாதம் போற்றுபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →