பாடல் 671
பரவி யுனது பொற் கரமு முகமுமுத்
- தலம்
- விரிஞ்சிபுரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனதனத் தனன தனதனத்தனன தனதனத் தனன தனதனத்தனன தனதனத் தனன தனதனத்தனதானா
பாடல் வரிகள்
பரவி யுனது பொற் கரமு முகமுமுத்தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப்பதமும் விரவுகுக் குடமு மயிலுமுட்பரிவாலே
படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத்தெவரு மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப்பசியில் வருமவர்க் கசன மொருபிடிப்படையாதே
சருவி யினியநட் புறவு சொலிமுதற்பழகு மவரெனப் பதறி யருகினிற்சரச விதமளித் துரிய பொருள்பறித்திடுமானார்
தமது மருகமதக் களப புளகிதச்சயில நிகர்தனத் திணையின் மகிழ்வுறத்தழுவி யவசமுற் றுருகி மருளெனத்திரிவேனோ
கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக்கெருவ மதமொழித் துடல்கள் துணிபடக்கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத்திடுதீரா
கமல அயனுமச் சுதனும் வருணனக்கினியு நமனுக் கரியு லுறையுமெய்க்கணனு மமரரத் தனையு நிலைபெறப்புரிவோனே
இரையு முததியிற் கடுவை மிடறமைத்துழுவை யதளுடுத் தரவு பணிதரித்திலகு பெறநடிப் பவர்மு னருளுமுத்தமவேளே
இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத்தவனி தனி லெழிற் கரும முனிவருக்கினிய கரபுரப் பதியி லறுமுகப்பெருமாளே.
