உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 670

நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு

ராகம்
மனோலயம்
தாளம்
அங்கதாளம் (5)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2தனன தந்த தானன தனன தந்த தானனதனன தந்த தானனதனதான

பாடல் வரிகள்

நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியுநெகிழ வந்து நேர்படுமவிரோதம்

நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபரநிருப அங்கு மாரவெளெனவேதம்

சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்சமய பஞ்ச பாதகரறியாத

தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வனசரண புண்ட ஡ணகமதருள்வாயே

மகர விம்ப சீகர முகர வங்க வாரிதிமறுகி வெந்து வாய்விடநெடுவான

வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரனுமடிய இந்தி ராதியர்குடியேறச்

சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடுசிறுவ சந்த்ர சேகரர்பெருவாழ்வே

திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவியதிருவி ரிஞ்சை மேவியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →