பாடல் 662
இல்லையென நாணி யுள்ளதின் மறாம
- தலம்
- வெள்ளிகரம்
- ராகம்
- குமுதக்ரியா
- தாளம்
- ஆதி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தய்யதன தான தய்யதன தானதய்யதன தானதனதான
பாடல் வரிகள்
இல்லையென நாணி யுள்ளதின் மறாமலெள்ளினள வேனும்பகிராரை
எவ்வமென நாடி யுய்வகையி லேனையெவ்வகையு நாமங்கவியாகச்
சொல்லவறி யேனை யெல்லைதெரி யாததொல்லைமுத லேதென்றுணரேனைத்
தொய்யுமுடல் பேணு பொய்யனைவி டாதுதுய்யகழ லாளுந்திறமேதோ
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழமையவரை பாகம்படமோது
மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்வள்ளிமலை வாழுங்கொடிகோவே
வெல்லுமயி லேறு வல்லகும ரேசவெள்ளிலுட னீபம்புனைவோனே
வெள்ளிமணி மாட மல்குதிரு வீதிவெள்ளிநகர் மேவும்பெருமாளே.
