பாடல் 661
தொய்யில் செய்யில் நொய்யர் கையர்
- தலம்
- வெள்ளிகரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தய்ய தய்ய தய்ய தய்யதய்ய தய்யதனதான
பாடல் வரிகள்
தொய்யில் செய்யில் நொய்யர் கையர்தொய்யு மையஇடையாலுந்
துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல்சொல்லு கள்ளவிழியாலும்
மைய செவ்வி மவ்வல் முல்லைமல்கு நல்லகுழலாலும்
மையல் கொள்ள எள்ளல் செய்யும்வல்லி சொல்லைமகிழ்வேனோ
செய்ய துய்ய புள்ளி நவ்விசெல்வி கல்வரையிலேனல்
தெய்வ வள்ளி மையல் கொள்ளுசெல்வ பிள்ளைமுருகோனே
மெய்யர் மெய்ய பொய்யர் பொய்யவெள்ளை வெள்ளிநகர்வாழ்வே
வெய்ய சைய வில்லி சொல்லைவெல்ல வல்லபெருமாளே.
