பாடல் 659
பொருவன கள்ள இருகயல் வள்ளை
- தலம்
- வெள்ளிகரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தய்ய தனதன தய்யதனதன தய்யதனதான
பாடல் வரிகள்
பொருவன கள்ள இருகயல் வள்ளைபுரிகுழை தள்ளிவிளையாடும்
புளகித வல்லி யிளகித வல்லிபுரியிள முல்லைநகைமீதே
உருகிட வுள்ள விரகுடை யுள்ளமுலகுயி ருள்ளபொழுதேநின்
றுமைதரு செல்வ னெனமிகு கல்வியுணர்வொடு சொல்லவுணராதோ
மருமலர் வள்ளி புரமுள வள்ளிமலைமற வள்ளிமணவாளா
வளர்புவி யெல்லை யளவிடு தொல்லைமரகத நல்லமயில்வீரா
அருவரை விள்ள அயில்விடு மள்ளஅணிவயல் வெள்ளிநகர்வாழ்வே
அடையலர் செல்வ மளறிடை செல்லஅமர்செய வல்லபெருமாளே.
