பாடல் 648
வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
- தலம்
- கதிர்காமம்
- ராகம்
- பீம்பளாஸ்
- தாளம்
- அங்கதாளம் (5 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தனதனன தான தந்த தனதனன தான தந்ததனதனன தான தந்ததனதான
பாடல் வரிகள்
வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்றுமடிபிடிய தாக நின்றுதொடர்போது
மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்றுவசைகளுட னேதொ டர்ந்துஅடைவார்கள்
கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்துகரியபுன லேசொ ரிந்துவிடவேதான்
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டுகடுகிவர வேணு மெந்தன்முனமேதான்
பரகிரியு லாவு செந்தி மனையினுட னேயி டும்பன்பழநிதனி லேயி ருந்தகுமரேசா
பதிகள் பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்றபதமடியர் காண வந்தகதிர்காமா
அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றையணிவர் சடை யாளர் தந்தமுருகோனே
அரகரசி வாய சம்புலத குருபரகு மார நம்புமடியர்தமை யாள வந்தபெருமாளே.
