பாடல் 647
முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி
- தலம்
- கதிர்காமம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தான தான தத்த தனன தான தான தத்ததனன தான தான தத்ததனதான
பாடல் வரிகள்
முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றிமுனியு மார வார முற்றகடலாலே
முடிவி லாத தோர் வடக்கி லெரியு மால மார்பி டத்துமுழுகி யேறி மேலெ றிக்குநிலவாலே
வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும்வினைவி டாத தாய ருக்குமழியாதே
விளையு மோக போக முற்றி அளவி லாத காதல் பெற்றவிகட மாதை நீ யணைக்கவரவேணும்
கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல்த ரித்தகடவு ளேக லாப சித்ரமயில்வீரா
கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்திககன மேவு வாளொ ருத்திமணவாளா
அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்கஅரிய ஞான வாச கத்தையருள்வோனே
அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ ழுப்பிஅமரர் லோகம் வாழ வைத்தபெருமாளே.
