பாடல் 64
தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- ஆபோகி
- தாளம்
- சதுஸ்ர ஏகம் - மிஸ்ர நடை (14)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
(எடுப்பு - அதீதம்)தனத்தந்தன தனத்தந்தனதனத்தந்தனதனதானத்
பாடல் வரிகள்
தரிக்குங்கலை நெகிழ்க்கும்பரதவிக்குங்கொடிமதனேவிற்
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறுதமிழ்த்தென்றலினுடனேநின்
றெரிக்கும்பிறை யெனப்புண்படுமெனப்புன்கவிசிலபாடி
இருக்குஞ்சிலர் திருச்செந்திலையுரைத்துய்ந்திடஅறியாரே
அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிரமனுக்குந்தெரிவரிதான
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடுமரற்கும்புரிதவபாரக்
கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபைவரிக்குங்குருபரவாழ்வே
கிளைக்குந்திற லரக்கன்கிளைகெடக்கன்றியபெருமாளே.
