பாடல் 629
நாமேவு குயிலாலு மாமார னயிலாலு
- தலம்
- குன்றக்குடி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானான தனதான தானான தனதானதானான தனதானதனதான
பாடல் வரிகள்
நாமேவு குயிலாலு மாமார னயிலாலுநாடோ று மதிகாயும்வெயிலாலும்
நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலுநாடாசை தருமோகவலையூடே
ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவிலேவாரும் விழிமாதர்துய்ருடே
ஏகாம லழியாத மேலான பதமீதிலேகீயு னுடன்மேவஅருள்தாராய்
தாமோக முடனுறு பால்தேடி யுரலுடுதானேறி விளையாடுமொருபோதில்
தாயாக வருசோதை காணாது களவாடுதாமோத ரன்முராரிமருகோனே
மாமாது வனமாது கார்மேவு சிலைமாதுமாலாகி விளையாடுபுயவீரா
வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழமாயூர கிரிமேவுபெருமாளே.
