பாடல் 626
நேசா சாரா டம்பர மட்டைகள்
- தலம்
- குன்றக்குடி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானா தானா தந்தன தத்தனதானா தானா தந்தன தத்தனதானா தானா தந்தன தத்தனதனதான
பாடல் வரிகள்
நேசா சாரா டம்பர மட்டைகள்பேசா தேயே சுங்கள மட்டைகள்நீசா ளோடே யும்பழ கிக்கவர்பொருளாலே
நீயே நானே யென்றொரு சத்தியம்வாய்கூ சாதோ துங்க படத்திகள்நேரா லேதா னின்றுபி லுக்கிகள்எவர்மேலும்
ஆசா பாசா தொந்தரை யிட்டவர்மேல்வீழ் வார்பால் சண்டிகள் கட்டழகாயே மீதோ லெங்கு மினுக்கிகள்வெகுமோகம்
ஆகா தாவே சந்தரு திப்பொழுதோகோ வாவா வென்று பகட்டிகளாகா மோகா வம்பிகள் கிட்டிலுமுறவாமோ
பேசா தேபோய் நின்றுமி யிற்றுயிர்வாயா வாவா வென்று குடித்தருள்பேரா லேநீள் கஞ்சன் விடுத்தெதிர்வருதூது
பேழ்வாய் வேதா ளம்பக டைப்பகுவாய்நீள் மானா ளுஞ்சர ளத்தொடுபேயானாள் போர் வென்றெதி ரிட்டவன்மருகோனே
மாசூ டாடா டும்பகை யைப்பகைசூரா ளோடே வன்செரு வைச்செறுமாசூ ராபா ரெங்கும ருட்பொலிமுருகோனே
வானா டேழ்நா டும்புகழ் பெற்றிடுதேனா றேசூழ் துங்க மலைப்பதிமாயூ ராவாழ் குன்றை தழைத்தருள்பெருமாளே.
