பாடல் 615
கொண்டாடிக் கொஞ்சு மொழிகோடு
- தலம்
- தென்சேரிகிரி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்தானத் தந்த தனதனதந்தானத் தந்த தனதனதந்தானத் தந்த தனதனதனதான
பாடல் வரிகள்
கொண்டாடிக் கொஞ்சு மொழிகோடுகண்டாரைச் சிந்து விழிகொடுகொந்தாரச் சென்ற குழல்கொடுவடமேருக்
குன்றோடொப் பென்ற முலைகொடுநின்றோலக் கஞ்செய் நிலைகொடுகொம்பாயெய்ப் புண்ட விடைகொடுபலரோடும்
பண்டாடச் சிங்கி யிடுமவர்விண்டாலிக் கின்ற மயிலனபண்பாலிட் டஞ்செல் மருளதுவிடுமாறு
பண்டேசொற் றந்த பழமறைகொண்டேதர்க் கங்க ளறவுமைபங்காளர்க் கன்று பகர்பொருள்அருள்வாயே
வண்டாடத் தென்றல் தடமிசைதண்டாதப் புண்ட ரிகமலர்மங்காமற் சென்று மதுவைசெய்வயலுரா
வன்காளக் கொண்டல் வடிவொருசங்க்ராமக் கஞ்சன் விழவுதைமன்றாடிக் கன்பு தருதிருமருகோனே
திண்டாடச் சிந்து நிசிசரர்தொண்டாடக் கண்ட வமர்பொருசெஞ்சேவற் செங்கை யுடையசண்முகதேவே
சிங்காரச் செம்பொன் மதிளதலங்காரச் சந்த்ர கலைதவழ்தென்சேரிக் குன்றி லினிதுறைபெருமாளே.
