பாடல் 598
காலனிடத் ...... தணுகாதே
- தலம்
- திருச்செங்கோடு
- ராகம்
- சங்கராபரணம்
- தாளம்
- திஸ்ர ஏகம் (3)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தனத்தனதான
பாடல் வரிகள்
காலனிடத்தணுகாதே
காசினியிற்பிறவாதே
சீலஅகத்தியஞான
தேனமுதைத்தருவாயே
மாலயனுக்கரியானே
மாதவரைப்பிரியானே
நாலுமறைப்பொருளானே
நாககிரிப்பெருமாளே.
