உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 588

கரையற வுருகுதல் தருகயல் விழியினர்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதன தனதன தனதன தனதனதந்தான தந்ததனதான

பாடல் வரிகள்

கரையற வுருகுதல் தருகயல் விழியினர்கண்டான செஞ்சொல்மடமாதர்

கலவியில் முழுகிய நெறியினி லறிவுகலங்காம யங்கும்வினையேனும்

உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும்உன்பாத கஞ்சமலர்மீதே

உரவாடு புனைதர நினைதரு மடியரொடொன்றாக என்றுபெறுவேனோ

வரையிரு துணிபட வளைபடு சுரர்குடிவந்தேற இந்த்ரபுரிவாழ

மதவித கஜரத துரகத பததியின்வன்சேனை மங்கமுதுமீன

திரைமலி சலநிதி முறையிட நிசிசரர்திண்டாட வென்றகதிர்வேலா

ஜெகதல மிடிகெட விளைவன வயலணிசெங்கோ டமர்ந்தபெருமாளே.

(0507-0000-2442)

எல்லாப் பாடல்களும் →