பாடல் 586
பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
- தலம்
- திருச்செங்கோடு
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்தான தந்த தந்தான தந்ததந்தான தந்ததனதான
பாடல் வரிகள்
பந்தாடி யங்கை நொந்தார் பரிந்துபைந்தார் புனைந்தகுழல்மீதே
பண்பார் சுரும்பு பண்பாடு கின்றபங்கே ருகங்கொள்முகமீதே
மந்தார மன்றல் சந்தார மொன்றிவன்பாத கஞ்செய்தனமீதே
மண்டாசை கொண்டு விண்டாவி நைந்துமங்காம லுன்றனருள்தாராய்
கந்தா அரன்றன் மைந்தா விளங்குகன்றா முகுந்தன்மருகோனே
கன்றா விலங்க லொன்றாறு கண்டகண்டா வரம்பைமணவாளா
செந்தா தடர்ந்த கொந்தார் கடம்புதிண்டோ ள் நிரம்பஅணிவோனே
திண்கோ டரங்க ளெண்கோ டுறங்குசெங்கோட மர்ந்தபெருமாளே.
