பாடல் 582
மேக மெனுங்குழல் சாய்த்திரு கோக னகங்கொடு கோத்தணை
- தலம்
- விராலிமலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தனதானன தந்தன தாத்தனதனதான
பாடல் வரிகள்
மேக மெனுங்குழல் சாய்த்திரு கோக னகங்கொடு கோத்தணைமேல்விழு கின்ற பராக்கினிலுடைசோர
மேகலை யுந்தனி போய்த்தனி யேகர ணங்களு மாய்க்கயல்வேல்விழி யுங்குவி யாக்குரல்மயில்காடை
கோகில மென்றெழ போய்க்கனி வாயமு துண்டுரு காக்களிகூரவு டன்பிரி யாக்கலவியின்மூழ்கிக்
கூடிமுயங்கி விடாய்த்திரு பார தனங்களின் மேற்றுயில்கூரினு மம்புய தாட்டுணைமறவேனே
மோகர துந்துமி யார்ப்ப விராலி விலங்கலின் வீட்டதில்மூவுல குந்தொழு தேத்திடவுறைவோனே
மூதிசை முன்பொரு காற்றட மேருவை யம்பினில் வீழ்த்தியமோகன சங்கரி வாழ்த்திடமதியாமல்
ஆக மடிந்திட வேற்கொடு சூரனை வென்றடல் போய்த்தணியாமையின் வென்றவ னாற்பிறகிடுதேவர்
ஆதி யிளந்தலை காத்தர சாள அவன்சிறை மீட்டவனாளு லகங்குடி யேற்றியபெருமாளே.
