பாடல் 581
மாலாசை கோப மோயாதெ நாளு
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானான தான தானான தானதானான தானதனதான
பாடல் வரிகள்
மாலாசை கோப மோயாதெ நாளுமாயா விகாரவழியேசெல்
மாபாவி காளி தானேனு நாதமாதா பிதாவுமினிநீயே
நாலான வேத நூலாக மாதிநானோதி னேனுமிலைவீணே
நாள்போய் விடாம லாறாறு மீதில்ஞானோப தேசமருள்வாயே
பாலா கலார ஆமோத லேபபாடீர வாகஅணிமீதே
பாதாள பூமி யாதார மீனபானீய மேலைவயலுரா
வேலா விராலி வாழ்வே ச்முகவேதாள பூதபதிசேயே
வீரா கடோ ர சூராரி யேசெவேளே சுரேசர்பெருமாளே.
