உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 580

மாயா செர்ருப முழுச்ச மத்திகள்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தானா தனான தனத்த தத்தனதானா தனான தனத்த தத்தனதானா தனான தனத்த தத்தனதனதான

பாடல் வரிகள்

மாயா செர்ருப முழுச்ச மத்திகள்ஓயா வுபாய மனப்ப சப்பிகள்வாணாளை யீரும் விழிக்க டைச்சிகள்முநிவோரும்

மாலாகி வாட நகைத்து ருக்கிகள்ஏகாச மீது தனத்தி றப்பிகள்வா஡ண ரி஡ணரென் முழுப்பு ரட்டிகள்வெகுமோகம்

ஆயாத வாசை யெழுப்பு மெத்திகள்ஈயாத போதி லறப்பி ணக்கிகள்ஆவேச நீருண் மதப்பொ றிச்சிகள்பழிபாவம்

ஆமா றெணாத திருட்டு மட்டைகள்கோமாள மான குறிக்க ழுத்திகள்ஆசார வீன விலைத்த னத்தியருறவாமோ

காயாத பால்நெய் தயிர்க்கு டத்தினைஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள்காணாத வாறு குடிக்கு மப்பொழுதுரலோடே

கார்போலு மேனி தனைப்பி ணித்தொருபோர்போ லசோதை பிடித்த டித்திடகாதோடு காது கையிற்பி டித்தழுதினிதூதும்

வேயா லநேக விதப்ப சுத்திரள்சாயாமல் மீள அழைக்கு மச்சுதன்வீறான மாம னெனப்ப டைத்தருள்வயலு஡ரா

வீணாள் கொடாத படைச்செ ருக்கினில்சூர்மாள வேலை விடுக்கும் அற்புதவேலா விராலி மலைத்த லத்துறைபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →