உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 58

சந்தனச வாதுநிறை கற்பூர

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்ததன தானதன தத்தானதந்ததன தானதன தத்தானதந்ததன தானதன தத்தானதனதான

பாடல் வரிகள்

சந்தனச வாதுநிறை கற்பூரகுங்குமப டீரவிரை கத்தூரிதண்புழுக ளாவுகள பச்சீதவெகுவாச

சண்பகக லாரவகு ளத்தாமவம்புதுகி லாரவயி ரக்கோவைதங்கியக டோ ரதர வித்தாரபரிதான

மந்த்ரம தானதன மிக்காசைகொண்டுபொருள் தேடுமதி நிட்டூரவஞ்சகவி சாரஇத யப்பூவையனையார்கள்

வந்தியிடு மாயவிர கப்பார்வைஅம்பிலுளம் வாடுமறி வற்றேனைவந்தடிமை யாளஇனி யெப்போதுநினைவாயே

இந்த்ரபுரி காவல்முதன் மைக்காரசம்ப்ரமம யூரதுர கக்காரஎன்றுமக லாதஇள மைக்காரகுறமாதின்

இன்பஅநு போகசர சக்காரவந்தஅசு ரேசர்கல கக்காரஎங்களுமை சேயெனரு மைக்காரமிகுபாவின்

செந்தமிழ்சொல் நாலுகவி தைக்காரகுன்றெறியும் வேலின்வலி மைக்காரசெஞ்சொலடி யார்களெளி மைக்காரஎழில்மேவும்

திங்கள்முடி நாதர்சம யக்காரமந்த்ரவுப தேசமகி மைக்காரசெந்தினகர் வாழுமரு மைத்தேவர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →