பாடல் 579
கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து
- தலம்
- விராலிமலை
- ராகம்
- கரஹரப்ரியா
- தாளம்
- சதுஸ்ர்ருபகம் (6)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
(எடுப்பு - வீச்சில் 1/2 இடம்)தனாதனன தான தந்த தனாதனன தான தந்ததனாதனன தான தந்ததனதான
பாடல் வரிகள்
கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்துகுலாவியவ மேதி ரிந்துபுவிமீதே
எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்துஎலாவறுமை தீர அன்றுனருள்பேணேன்
சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கிசுகாதரம தாயொ ழுங்கிலொழுகாமல்
கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்துகிலாதவுட லாவி நொந்துமடியாமுன்
தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்சொலேழுலக மீனு மம்பையருள்பாலா
நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்பநபோமணி சமான துங்கவடிவேலா
படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்துபசேலெனவு மேத ழைந்துதினமேதான்
விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்குவிராலிமலை மீது கந்தபெருமாளே.
