பாடல் 555
குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்
- தலம்
- திருசிராப்பள்ளி
- தாளம்
- அங்கதாளம் (7 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தானன தத்தன தந்தனதனன தானன தத்தன தந்தனதனன தானன தத்தன தந்தனதனதான
பாடல் வரிகள்
குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்கடுவ தாமெனு மைக்கண் மடந்தையர்குமுத வாயமு தத்தை நுகர்ந்திசைபொருகாடை
குயில்பு றாமயில் குக்கில் சுரும்பினம்வனப தாயுத மொக்கு மெனும்படிகுரல்வி டாஇரு பொற்குட மும்புளகிதமாகப்
பவள ரேகைப டைத்தத ரங்குறியுறவி யாளப டத்தை யணைந்துகைபரிச தாடன மெய்க்கர ணங்களின்மதனுலின்
படியி லேசெய்து ருக்கிமு யங்கியெஅவச மாய்வட பத்ர நெடுஞ்சுழிபடியு மோகச முத்ரம ழுந்துதலொழிவேனோ
தவள ரூபச ரச்சுதி யிந்திரைரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர்சமுக சேவித துர்க்கை பயங்கரிபுவநேசை
சகல காரணி சத்தி பரம்பரியிமய பார்வதி ருத்ரி நிரஞ்சனிசமய நாயகி நிஷ்களி குண்டலியெமதாயி
சிவைம நோமணி சிற்சுக சுந்தரிகவுரி வேதவி தக்ஷணி யம்பிகைத்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள்முருகோனே
சிகர கோபுர சித்திர மண்டபமகர தோரண ரத்ந அலங்க்ருததிரிசி ராமலை அப்பர் வணங்கியபெருமாளே.
