உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 526

நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தத்தத் தத்தத் தத்தத் தத்தத்தத்தத் தத்தத் தனதானதனத்த தனத்த தனத்த தனத்தனதனதன தனதன தனதன தனதனதனதன தனதனதனதான

பாடல் வரிகள்

நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்கச்சிக் கச்சுற் றறன்மேவிநெறித்து வெறித்து இருட்டை வெருட்டியநிரைதரு மருமலர் செருகிடு பரிமளநிறையுறை மதுகரநெடிதாடி

நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற்றொப்புக் கொப்புக் குயர்வாகிநெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமைநிகரென வகருவு முகுபுகை தொகுமிகுநிகழ்புழு கொழுகியகுழன்மேலும்

வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட்டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோலவளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன்மதசிலை யதுவென மகபதி தனுவெனமதிதில தமும்வதிநுதன்மேலும்

மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப்பொற்பக் கத்திச் சையனாகிமனத்தி னனைத்து மணைத்த துணைப்பதமலரல திலைநிலை யெனமொழி தழியமெய்வழிபட லொழிவனையருள்வாயே

நச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத்துட்டக் கட்டத் தசிகாணநடத்தி விடத்தை யுடைத்த படத்தினில்நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில்நகைமுக திருவுறைமணிமார்பன்

நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத்தைக்கைப் பற்றிப் பொருமாயனரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புறநசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்தநரகரி யொருதிருமருகோனே

கச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப்பட்டுக் குட்பட் டமுதாலுங்கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடுகனதன பரிமள முழுகுப னிருபுயகனகதி வியமணியணிமார்பா

கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப்பட்சிக் கக்கொட் டசுராதிகறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடுகறுவிய சிறியவ கடவைகள் புடைபடுகடவட மலையுறைபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →