உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 499

சகசம்பக் குடைசூழ் சிவிகைமெல்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதந்தத் தனனா தனதனதனதந்தத் தனனா தனதனதனதந்தத் தனனா தனதனதனதான

பாடல் வரிகள்

சகசம்பக் குடைசூழ் சிவிகைமெல்மதவின்பத் துடனே பலபணிதனிதம்பட் டுடையோ டிகல்முரசொலிவீணை

தவளந்தப் புடனே கிடுகிடுநடைதம்பட் டமிடோ ல் பலவொலிசதளம்பொற் றடிகா ரருமிவைபுடைசூழ

வெகுகும்பத் துடனே பலபடைகரகஞ்சுற் றிடவே வரஇசைவெகுசம்பத் துடனே யழகுடனிதமேவும்

விருமஞ்சித் திரமமா மிதுநொடிமறையும் பொய்ப் பவுஷோ டுழல்வதுவிடவும்பர்க் கரிதா மிணையடிதருவாயே

திகுதந்தித் திகுதோ திகுதிகுதிகுதந்தித் திகுதோ திகுதிகுதிகுர் தஞ்செச் செகசே செககணஎனபேரிக்

திமிர்தங்கற் குவடோ டெழுகடலொலிகொண்டற் றுருவோ டலறிடதிரள்சண்டத் தவுணோர் பொடிபடவிடும்வேலா

அகரம்பச் சுருவோ டொளியுறைபடிகம்பொற் செயலா ளரனரிஅயனண்டர்க் கரியா ளுமையருள்முருகோனே

அமுர்தம்பொற் குவடோ டிணைமுலைமதிதுண்டப் புகழ்மான் மகளொடும்அருள் செம்பொற் புலியூர் மருவியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →