பாடல் 493
எழுகடல் மணலை அளவிடி னதிக
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதிமி-2, தகிட-1 1/2தனதன தனன தனதன தனனதனதன தனனதனதான
பாடல் வரிகள்
எழுகடல் மணலை அளவிடி னதிகமெனதிடர் பிறவிஅவதாரம்
இனியுன தபய மெனதுயி ருடலுமினியுடல் விடுகமுடியாது
கழுகொடு நரியு மெரிபுவி மறலிகமலனு மிகவுமயர்வானார்
கடனுன தபய மடிமையு னடிமைகடுகியு னடிகள்தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவிவிமலிமு னருளுமுருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரியவிசைபெறு மயிலில்வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரையிரைகொளும் அயிலையுடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியுரினில்நட மருவுபெருமாளே.
