பாடல் 490
விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட
- தலம்
- சிதம்பரம்
- ராகம்
- சங்கராபரணம்
- தாளம்
- அங்கதாளம் (8 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகிட-1 1/2, தக-1, தகதிமி-2தகதிமி-2, தகதிமி-2தனந்தத் தத்தன தானன தானனதனந்தத் தத்தன தானன தானனதனந்தத் தத்தன தானன தானனதனதான
பாடல் வரிகள்
விடுங்கைக் கொத்தக டாவுடை யானிடமடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும்விழுங்கப் பட்டற வேயற லோதியர்விழியாலே
விரும்பத் தக்கன போகமு மோகமும்விளம்பத் தக்கன ஞானமு மானமும்வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர்விடுநாளில்
இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல்கிடந்திட் டுத்தம ரானவர் கோவெனஇடங்கட் டிச்சுடு காடுபு காமுனமனதாலே
இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதரஇசைவாயே
கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்நடுங்கச் சுக்ரிவ னோடம ராடியகுரங்கைச் செற்றும கோததி தூளெழநிருதேசன்
குலங்கட் பட்டநி சாசரர் கோவெனஇலங்கைக் குட்டழ லோனெழ நீடியகுமண்டைக் குத்திர ராவண னார்முடிஅடியோடே
பிடுங்கத் தொட்டச ராதிப னாரதிப்ரியங் கொட் டக்கநன் மாமரு காஇயல்ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரெனவிருதூதும்
ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணிப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவபெரும்பற் றப்புலி யூர்தனில் மேவியபெருமாளே.
