பாடல் 480
அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ
- தலம்
- சிதம்பரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்தத் தானன தானன தானனதத்தத் தானன தானன தானனதத்தத் தானன தானன தானனதனதான
பாடல் வரிகள்
அக்குப் பீளைமு ளாவிளை மூளையொடுப்புக் காய்பனி நிர்மயிர் தோல்குடிலப்புச் சீபுழு வோடடை யார்தசையுறமேவி
அத்திப் பால்பல நாடிகு ழாயள்வழுப்புச் சார்வல மேவிளை யூளைகொளச்சுத் தோல்குடி லாமதி லேபொறிவிரகாளர்
சுக்கத் தாழ்கட லேசுக மாமெனபுக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள்தொக்குத் தீவினை யூழ்வினை காலமொடதனாலே
துக்கத் தேபர வாமல்ச தாசிவமுத்திக் கேசுக மாகப ராபரசொர்க்கப் பூமியி லேறிட வேபதமருள்வாயே
தக்கத் தோகிட தாகிட தீகிடசெக்கச் சேகண தாகண தோகணதத்தத் தானன டீகுட டாடுடுவெனதாளந்
தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரிகெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிடசத்திக் கேயிரை யாமென வேவிடுகதிர்வேலா
திக்கத் தோகண தாவென வேபொருசொச்சத் தாதையர் தாமென வேதிருசெக்கர்ப் பாதம தேபதி யாசுதியவைபாடச்
செப்பொற் பீலியு லாமயில் மாமிசைபக்கத் தேகுற மாதொடு சீர்பெறுதெற்குக் கோபுர வாசலில் மேவியபெருமாளே.
