பாடல் 479
அடப்பக் கம்பிடித்துத் தோளொடு தோள்பொர
- தலம்
- சிதம்பரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்தத் தந்தனத்தத் தானன தானனதனத்தத் தந்தனத்தத் தானன தானனதனத்தத் தந்தனத்தத் தானன தானனதனதான
பாடல் வரிகள்
அடப்பக் கம்பிடித்துத் தோளொடு தோள்பொரவளைத்துச் செங்கரத்திற் சீரொடு பாவொடுஅணுக்கிச் செந்துணுக்கிற் கோவித ழுறல்களதுகோதி
அணிப்பொற் பங்கயத்துப் பூண்முலை மேகலைநெகிழ்த்துப் பஞ்சரித்துத் தாபண மேயெனஅருட்டிக் கண்சிமிட்டிப் பேசிய மாதர்களுறவோடே
படிச்சித் தங்களித்துத் தான்மிக மாயைகள்படித்துப் பண்பயிற்றிக் காதல்கள் மேல்கொளபசப்பிப் பின்பிணக்கைக் கூறிய வீணிகளவமாயப்
பரத்தைக் குண்டுணர்த்துத் தோதக பேதைகள்பழிக்குட் சஞ்சரித்துப் போடிடு மூடனைபரத்துற் றண்பதத்துப் போதக் மீதெனஅருள்தாராய்
தடக்கைத் தண்டெடுத்துச் சூரரை வீரரைநொறுக்கிப் பொன்றவிட்டுத் தூளெழ நீறெழதகர்த்துப் பந்தடித்துச் சூடிய தோரணகலைவீரா
தகட்டுப் பொன்சுவட்டுப் பூவணை மேடையில்சமைப்பித் தங்கொருத்திக் கோதில மாமயில்தனிப்பொற் பைம்புனத்திற் கோகில மாவளிமணவாளா
திடத்திற் றிண்பொருப்பைத் தோள்கொடு சாடியஅரக்கத் திண்குலத்தைச் சூறைகொள் வீரியதிருப்பொற் பங்கயத்துக் கேசவர் மாயவர்அறியாமல்
திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடியசமர்த்தர்ப் பொன்புவிக்குட் டேவர்க ணாயகதிருச்சிற் றம்பலத்துட் கோபுர மேவியபெருமாளே.
