பாடல் 476
அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
- தலம்
- சிதம்பரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்யதத்த தன்ன தய்யதனதான
பாடல் வரிகள்
அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளிஅத்தை நண்ணு செல்வருடனாகி
அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்லலற்று நின்னை வல்லபடிபாடி
முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளிமுத்த னென்ன வுள்ளமுணராதே
முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளுமுட்ட னிங்ங னைவதொழியாதோ
தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளுதித்து மன்னு பிள்ளைமுருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கையசித்ர வண்ண வல்லியலர்சூடும்
பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளிபத்தர் கன்னி புல்லுமணிமார்பா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ளபச்சை மஞ்ஞை வல்லபெருமாளே.
