உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 458

கதித்துப்பொங் கலுக்கொத்துப்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்தத்தம் தனத்தத்தத்தனத்தத்தம் தனத்தத்தத்தனத்தத்தம் தனத்தத்தத்தனதான

பாடல் வரிகள்

கதித்துப்பொங் கலுக்கொத்துப்பணைத்துக்கொம் பெனத்தெற்றிக்கவித்துச்செம் பொனைத்துற்றுக்குழலார்பின்

கழுத்தைப்பண் புறக்கட்டிச்சிரித்துத்தொங் கலைப்பற்றிக்கலைத்துச்செங் குணத்திற்பித்திடுமாதர்

பதித்துத்தந் தனத்தொக்கப்பிணித்துப்பண் புறக்கட்டிப்பசப்பிப்பொன் தரப்பற்றிப்பொருள்மாளப்

பறித்துப்பின் துரத்துச்சொற்கபட்டுப்பெண் களுக்கிச்சைப்பலித்துப்பின் கசுத்திப்பட்டுழல்வேனோ

கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற்கொதித்துச்சங் கரித்துப்பற்கடித்துச்சென் றுழக்கித்துக்கசுரோரைக்

கழித்துப்பண் டமர்க்குச்செப்பதத்தைத்தந் தளித்துக்கைக்கணிக்குச்சந் தரத்தைச்சுத்தொளிர்வேலா

சிதைத்திட்டம் புரத்தைச்சொற்கயத்தைச்சென் றுரித்துத்தற்சினத்தக்கன் சிரத்தைத்தட்சிவனார்தஞ்

செவிக்குச்செம் பொருட்கற்கப்புகட்டிச்செம் பரத்திற்செய்த்திருச்சிற்றம் பலச்சொக்கப்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →