பாடல் 453
வண்டையொத் துக்கயல் கண்சுழற் றுப்புரு
- தலம்
- சிதம்பரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்தனத் தத்தன தந்தனத் தத்தனதந்தனத் தத்தன தந்தனத் தத்தனதந்தனத் தத்தன தந்தனத் தத்தனதந்ததான
பாடல் வரிகள்
வண்டையொத் துக்கயல் கண்சுழற் றுப்புருவஞ்சிலைக் குத்தொடு அம்பையொத் துத்தொடைவண்டுசுற் றுக்குழல் கொண்டலொத் துக்கமுகென்பக்ணவம்
மந்தரத் தைக்கட பொங்கிபத் துப்பணைகொம்பையொத் துத்தன முந்துகுப் பத்தெருவந்துஎத் திப்பொரு மங்கையர்க் கைப்பொருளன்பினாலே
கொண்டழைத் துத்தழு வுங்கைதட் டிற்பொருள்கொண்டுதெட் டிச்சர சம்புகழ்க் குக்குனகுங்குழற் கிப்படி நொந்துகெட் டுக்குடில்மங்குறாமல்
கொண்டுசத் திக்கட லுண்டுகுப் பத்துனினன்பருக் குச்செயல் தொண்டுபட் டுக்கமழ்குங்குமத் திற்சர ணம்பிடித் துக்கரையென்றுசேர்வேன்
அண்டமிட் டிக்குட டிண்டிமிட் டிக்குகுடந்தகொட் டத்தகு டிங்குதொக் கத்தமடஞ்சகட் டைக்குண கொம்புடக் கைக்கிடலென்பதாளம்
அண்டமெட் டுத்திசை யும்பல்சர்ப் பத்திரள்கொண்டல்பட் டுக்கிரி யும்பொடித் துப்புலனஞ்சவித் துத்திர ளண்டமுட் டத்துகள்வந்தசூரர்
கண்டமற் றுக்குட லென்புநெக் குத்தசனங்கடித் துக்குடி லஞ்சிவப் பச்செநிர்கண்தெறிக் கத்தலை பந்தடித் துக்கையிலங்குவேலால்
கண்களிக் கக்கக னந்துளுக் கப்புகழிந்திரற் குப்பதம் வந்தளித் துக்கனகம்பலத் திற்குற மங்கைபக் கத்துறைதம்பிரானே.
