பாடல் 452
குகனெ குருபர னேயென நெஞ்சிற்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தனதன தானன தந்தத்தனன தனதன தானன தந்தத்தனன தனதன தானன தந்தத்தனதான
பாடல் வரிகள்
குகனெ குருபர னேயென நெஞ்சிற்புகழ அருள்கொடு நாவினி லின்பக்குமுளி சிவவமு தூறுக வுந்திப்பசியாறிக்
கொடிய இருவினை மூலமும் வஞ்சக்கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக்குலைய நமசிவ யோமென கொஞ்சிக்களிகூரப்
பகலு மிரவுமி லாவெளி யின்புக்குறுகி யிணையிலி நாடக செம்பொற்பரம கதியிது வாமென சிந்தித்தழகாகப்
பவள மனதிரு மேனியு டன்பொற்சரண அடியவ ரார்மன வம்பொற்றருண சரண்மயி லேறியு னம்பொற்கழல்தாராய்
தகுட தகுதகு தாதக தந்தத்திகுட திகுதிகு தீதக தொந்தத்தடுடு டுடுடுடு டாடக டிங்குட்டியல்தாளம்
தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்கரடி தமருகம் வீணைகள் பொங்கத்தடிய ழனவுக மாருத சண்டச்சமரேறிக்
ககன மறைபட ஆடிய செம்புட்பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக்கடல்க ளெறிபட நாகமு மஞ்சத்தொடும்வேலா
கயிலை மலைதனி லாடிய தந்தைக்குருக மனமுன நாடியெ கொஞ்சிக்கனக சபைதனில் மேவிய கந்தப்பெருமாளே.
