உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 448

பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்தன தானத் தனந்த தானனதந்தன தானத் தனந்த தானனதந்தன தானத் தனந்த தானன தனதான

பாடல் வரிகள்

பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசரஅண்டம தாயுற் றிருந்த பார்மிசைபஞ்சவர் கூடித் திரண்ட தோர்நரஉருவாயே

பந்தம தாகப் பிணிந்த ஆசையில்இங்கித மாகத் திரிந்து மாதர்கள்பண்பொழி சூதைக் கடந்தி டாதுழல்படிறாயே

சங்கட னாகித் தளர்ந்து நோய்வினைவந்துடல் மூடக் கலங்கி டாமதிதந்தடி யேனைப் புரந்தி டாயுனதருளாலே

சங்கரர் வாமத் திருந்த நூபுரசுந்தரி யாதித் தருஞ்சு தாபததண்டைய னேகுக் குடம்ப தாகையின்முருகோனே

திங்களு லாவப் பணிந்த வேணியர்பொங்கர வாடப் புனைந்த மார்பினர்திண்சிலை சூலத் தழுந்து பாணியர்நெடிதாழ்வார்

சிந்துவி லேயுற் றெழுந்து காளவிடங்கள மீதிற் சிறந்த சோதியர்திண்புய மீதிற் றவழ்ந்து வீறியகுருநாதா

சிங்கம தாகத் திரிந்த மால்கெருவம்பொடி யாகப் பறந்து சீறியசிம்புள தாகச் சிறந்த காவெனவருகோமுன்

செங்கதி ரோனைக் கடிந்த தீவினைதுஞ்சிட வேநற் றவஞ்செய் தேறியதென்கயி லாயத் தமர்ந்து வாழ்வருள்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →