உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 44

கனங்கள் கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்ததந்த தந்த தந்த தந்ததனதான

பாடல் வரிகள்

கனங்கள் கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சுகண்க ளுஞ்சி வந்த யர்ந்துகளிகூரக்

கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்கறங்கு பெண்க ளும்பி றந்துவிலைகூறிப்

பொனின்கு டங்க ளஞ்சு மென்த னங்க ளும்பு யங்க ளும்பொருந்தி யன்பு நண்பு பண்புமுடனாகப்

புணர்ந்து டன்பு லர்ந்து பின்க லந்த கங்கு ழைந்த வம்புரிந்து சந்த தந்தி ரிந்துபடுவேனோ

அனங்க னெந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்திறந்தி ருண்ட கண்டர் தந்தஅயில்வேலா

அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச வெஞ்ச மம்புரிந்த அன்ப ரின்ப நண்பஉரவோனே

சினங்கள் கொண்டி லங்கை மன்சி ரங்கள் சித்த வெஞ்ச ரத்தெரிந்த வன்ப ரிந்த இன்பமருகோனே

சிவந்த செஞ்ச தங்கை யுஞ்சி லம்பு தண்டை யும்பு னைந்துசெந்தில் வந்த கந்த எங்கள்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →