பாடல் 439
மேக மொத்தகுழ லார்சி லைப்புருவ
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தத்ததன தான தத்ததனதான தத்ததன தான தத்ததனதான தத்ததன தான தத்ததனதனதான
பாடல் வரிகள்
மேக மொத்தகுழ லார்சி லைப்புருவவாளி யொத்தவிழி யார்மு கக்கமலமீது பொட்டிடழ கார்க ளத்திலணிவடமாட
மேரு வொத்தமுலை யார்ப ளப்பளெனமார்பு துத்திபுய வார்வ ளைக்கடகம்வீறி டத்துவளு நூலொ டொத்தஇடையுடைமாதர்
தோகை பக்ஷிநடை யார்ப தத்திலிடுநூபு ரக்குரல்கள் பாட கத்துகில்கள்சோர நற்றெருவு டேந டித்துமுலைவிலைகூறிச்
சூத கச்சரச மோடெ யெத்திவருவோரை நத்திவிழி யால்ம ருட்டுமயல்தூள்ம ருத்திடுயி ரேப றிப்பவர்களுறவாமோ
சேக ணச்செகண தோதி மித்திகுடடாடு டுட்டமட டீகு தத்தொகுர்திதீத கத்திமித தோவு டுக்கைமணிமுரசோதை
தேச முட்கவர ஆயி ரச்சிரமுமூளி பட்டுமக மேரு வுக்கவுணர்தீவு கெட்டுமுறை யோவெ னக்கதறவிடும்வேலா
ஆதி மத்திபல கார ணத்தியெனையீண சத்திஅரி ஆச னத்திசிவனாக முற்றசிவ காமி பத்தினியின்முருகோனே
ஆர ணற்குமறை தேடி யிட்டதிருமால்ம கட்சிறுமி மோக சித்ரவளிஆசை பற்றிஅரு ணாச லத்தின்மகிழ்பெருமாளே.
