பாடல் 410
கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வன
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தந்தனம் தனதன தனதனதனன தந்தனம் தனதன தனதனதனன தந்தனம் தனதன தனதனதனதான
பாடல் வரிகள்
கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வனமதன தந்திரங் கடியன கொடியனகனக குண்டலம் பொருவன வருவனபரிதாவும்
கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வனவிளையு நஞ்சளைந் தொளிர்வன பிளிர்வனகணையை நின்றுநின் றெதிர்வன முதிர்வனஇளையோர்முன்
செருவை முண்டகஞ் சிறுவன வுறுவனகளவு வஞ்சகஞ் சுழல்வன வுழல்வனதெனன தெந்தனந் தெனதென தெனதெனஎனநாதம்
தெரிசு ரும்பைவென் றிடுவன அடுவனமருள்செய் கண்கள்கொண் டணைவர்த முயிரதுதிருகு கின்றமங் கையர்வச மழிதலையொழிவேனோ
மருவு தண்டைகிண் கிணிபரி புரமிவைகலக லன்கலின் கலினென இருசரண்மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமுமிகவேறாய்
வலிய சிங்கமுங் கரடியு முழுவையுமுறைசெ ழும்புனந் தினைவிளை யிதண்மிசைமறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிருவுளநாடி
அருகு சென்றடைந் தவள்சிறு பதயுகசதத ளம்பணிந் ததிவித கலவியுளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுடனணைவோனே
அமரர் சங்கமுங் குடிபுக நொடியினில்நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்துஅருணை வந்துதென் திசைதனி லுறைதருபெருமாளே.
