பாடல் 389
விரகொடு வளைசங் கடமது தருவெம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதிமி-2, தகிட-1 1/2தனதன தனனம் தனதன தனனம்தனதன தனனம்தனதான
பாடல் வரிகள்
விரகொடு வளைசங் கடமது தருவெம்பிணிகொடு விழிவெங்கனல்போல
வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்றெனவிதி வழிவந்திடுபோதிற்
கரவட மதுபொங் கிடுமன மொடுமங்கையருற வினர்கண்புனல்பாயுங்
கலகமும் வருமுன் குலவினை களையுங்கழல்தொழு மியல்தந்தருள்வாயே
பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்படவர வணைகண்டுயில்மாலம்
பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்பயமற விடமுண்டெருதேறி
அரவொடு மதியம் பொதிசடை மிசைகங்கையுமுற அனலங்கையில்மேவ
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்கருணையில் மருவும்பெருமாளே.
