பாடல் 388
இரவியு மதியுந் தெரிவுற எழுமம்
- தலம்
- திருவருணை
- ராகம்
- குந்தலவராளி
- தாளம்
- மிஸ்ர சாபு
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதிமி-2, தகிட-1 1/2தனதன தனனம் தனதன தனனம்தனதன தனனம்தனதான
பாடல் வரிகள்
இரவியு மதியுந் தெரிவுற எழுமம்புவிதனி லினமொன்றிடுமாதும்
எழில்புதல் வருநின் றழுதுள முருகும்மிடர்கொடு நடலம்பலகூறக்
கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்டுயிரினை நமனுங்கருதாமுன்
கலைகொடு பலதுன் பமுமக லிடநின்கழலிணை கருதும்படிபாராய்
திருமரு வியதிண் புயனயன் விரியெண்டிசைகிடு கிடவந்திடுசூரன்
திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்சிடவலி யொடுகன்றிடும்வேலா
அருமறை யவரந் தரமுறை பவரன்புடையவ ருயஅன்றறமேவும்
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்கருணையி லுறையும்பெருமாளே.
