பாடல் 371
மகர மெறிகடல் விழியினு மொழியினு
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
பாடல் வரிகள்
மகர மெறிகடல் விழியினு மொழியினுமதுப முரல்குழல் வகையினு நகையினும்வளமை யினுமுக நிலவினு மிலவினுநிற்முசும்
மதுர இதழினு மிடையினு நடையினுமகளிர் முகுளித முலையினு நிலையினும்வனச பரிபுர மலரினு முலரினுமவர்நாமம்
பகரு கினுமவர் பணிவிடை திரிகினுமுருகி நெறிமுறை தவறினு மவரொடுபகடி யிடுகினு மமளியி லவர்தருமநுராகப்
பரவை படியினும் வசமழி யினுமுதலருணை நகர்மிசை கருணையொ டருளியபரம வொருவச னமுமிரு சரணமுமறவேனே
ககன சுரபதி வழிபட எழுகிரிகடக கிரியொடு மிதிபட வடகுலகனக கனகுவ டடியொடு முறிபடமுதுசூதங்
கதறு சுழிகட லிடைகிழி படமிகுகலக நிசிசரர் பொடிபட நடவியகலப மதகத துரகத ந்ருபகிரிமயில்வாழ்வே
தகன கரதல சிவசுத கணபதிசகச சரவண பரிமள சததளசயன வனசரர் கதிபெற முனிபெறுபுனமானின்
தரள முகபட நெறிபட நிமிர்வனதருண புளகித ம்ருகமத தனகிரிதழுவ மயல்கொடு தனிமட லெழுதியபெருமாளே.
