உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 368

அருவ மிடையென வருபவர் துவரிதழ்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான

பாடல் வரிகள்

அருவ மிடையென வருபவர் துவரிதழ்அமுது பருகியு முருகியு ம்ருகமதஅளக மலையவு மணிதுகி லகலவுமதிபார

அசல முலைபுள கிதமெழ அமளியில்அமளி படஅந வரதமு மவசமொடணையு மழகிய கலவியு மலமலமுலகோரைத்

தருவை நிகரிடு புலமையு மலமலமுருவு மிளமையு மலமலம் விபரிதசமய கலைகளு மலமல மலமரும்வினைவாழ்வுஞ்

சலில லிபியன சனனமு மலமலமினியு னடியரொ டொருவழி படஇருதமர பரிபுர சரணமு மவுனமுமருள்வாயே

உருவு கரியதொர் கணைகொடு பணிபதியிருகு தையுமுடி தமனிய தநுவுடனுருளை யிருசுடர் வலவனு மயனெனமறைபூணும்

உறுதி படுசுர ரதமிசை யடியிடநெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம்உடைய வொருவரு மிருவரு மருள்பெறவொருகோடி

தெருவு நகரியு நிசிசரர் முடியொடுசடச டெனவெடி படுவன புகைவனதிகுதி கெனஎரி வனஅனல் நகைகொடுமுனிவார்தஞ்

சிறுவ வனசரர் சிறுமியொ டுருகியபெரும அருணையி லெழுநிலை திகழ்வனசிகரி மிசையொரு கலபியி லுலவியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →