பாடல் 367
குமர குருபர குணதர நிசிசர
- தலம்
- திருவானைக்கா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
பாடல் வரிகள்
குமர குருபர குணதர நிசிசரதிமிர தினகர சரவண பவகிரிகுமரி சுதபகி ரதிசுத சுரபதிகுலமானுங்
குறவர் சிறுமியு மருவிய திரள்புயமுருக சரணென வுருகுதல் சிறிதுமில்கொடிய வினையனை யவலனை யசடனையதிமோகக்
கமரில் விழவிடு மழகுடை யரிவையர்களவி னொடுபொரு ளளவள வருளியகலவி யளறிடை துவளுறும் வெளிறனையினிதாளக்
கருணை யடியரொ டருணையி லொருவிசைசுருதி புடைதர வருமிரு பரிபுரகமல மலரடி கனவிலு நனவிலுமறவேனே
தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்மறுகி யலைபட விடநதி யுமிழ்வனசமுக முககண பணபணி பதிநெடுவடமாகச்
சகல வுலகமு நிலைபெற நிறுவியகனக கிரிதிரி தரவெகு கரமலர்தளர வினியதொ ரமுதினை யொருதனிகடையாநின்
றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்அகில புவனமு மளவிடு குறியவன்அளவு நெடியவ னளவிட அரியவன்மருகோனே
அரவு புனைதரு புநிதரும் வழிபடமழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்அறிவை யறிவது பொருளென அருளியபெருமாளே.
