பாடல் 365
பரிமள மிகவுள சாந்து மாமத
- தலம்
- திருவானைக்கா
- ராகம்
- தேஷ்
- தாளம்
- அங்கதாளம் (7 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதிமி-2, தகதிமி-2, தகிடதகதிமி-3 1/2(எடுப்பு -1/2 இடம்)தனதன தனதன தாந்த தானனதனதன தனதன தாந்த தானனதனதன தனதன தாந்த தானனதனதான
பாடல் வரிகள்
பரிமள மிகவுள சாந்து மாமதமுருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடியபலவரி யளிதுயில் கூர்ந்து வானுறுமுகில்போலே
பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்பரிபுர மலரடி வேண்டி யேவியபணிவிடை களிலிறு மாந்த கூளனைநெறிபேணா
விரகனை யசடனை வீம்பு பேசியவிழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழுவெகுளியை யறிவது போங்க பாடனைமலமாறா
வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியைவிளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனைவினவிமு னருள்செய்து பாங்கி னாள்வதுமொருநாளே
கருதலர் திரிபுர மாண்டு நீறெழமலைசிலை யொருகையில் வாங்கு நாரணிகழலணி மலைமகள் காஞ்சி மாநகருறைபேதை
களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினிகடலுடை யுலகினை யீன்ற தாயுமைகரிவன முறையகி லாண்ட நாயகியருள்பாலா
முரணிய சமரினில் மூண்ட ராவணனிடியென அலறிமு னேங்கி வாய்விடமுடிபல திருகிய நீண்ட மாயவன்மருகோனே
முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடையிருதன கிரிமிசை தோய்ந்த காமுகமுதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள்பெருமாளே.
