பாடல் 362
குருதிபு லாலென்பு தொன ரம்புகள்
- தலம்
- திருவானைக்கா
- ராகம்
- ரஞ்சனி
- தாளம்
- அங்கதாளம் (8) (புத்தகத்தில் -6 ??)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதிமி-2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2தனதன தானந்த தான தந்தனதனதன தானந்த தான தந்தனதனதன தானந்த தான தந்தனதனதான
பாடல் வரிகள்
குருதிபு லாலென்பு தொன ரம்புகள்கிருமிகள் மாலம்பி சீத மண்டியகுடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பனபொதிகாயக்
குடிலிடை யோந்து னேரைம்புலஅடவியி லோடுந்து ராசை வஞ்சகர்கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செயஅதனாலே
சுருதிபு ராணங்க ளாக மம்பகர்சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனைதுதியொடு நாடுந்தி யான மொன்றையுமுயலாதே
சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்தியதிமிரரொ டேபந்த மாய்வ ருந்தியதுரிசற ஆநந்த வீடு கண்டிடஅருள்வாயே
ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்நிருதரு மாவுங்க லோல சிந்துவும்உடைபட மோதுங்கு மார பங்கயகரவீரா
உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்உளமதில் நாளுங்க லாவி யின்புறவுறைவோனே
கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்அரிகரி கோவிந்த கேச வென்றிருகழல்தொழு சீரங்க ராச னண்புறுமருகோனே
கமலனு மாகண்ட லாதி யண்டருமெமது பிரானென்று தாள்வ ணங்கியகரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள்பெருமாளே.
