பாடல் 350
வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
- தலம்
- காஞ்சீபுரம்
- ராகம்
- ஆபோகி
- தாளம்
- ஆதி - 2 களை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
(எடுப்பு 1/4 இடம்)தந்த தாத்தன தன்ன தனந்தனதத்தத் தத்தத்தனதானா
பாடல் வரிகள்
வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சமயத்துக் கத்துத்திரையாளர்
வன்க லாத்திரள் தன்னை யகன்றுமனத்திற் பற்றற்றருளாலே
தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துருகிப்பொற் பத்மக்கழல்சேர்வார்
தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடுவைக்கச் சற்றுக்கருதாதோ
வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொருவெற்புப் பொட்டுப்படமாசூர்
வென்ற பார்த்திப பன்னிரு திண்புயவெட்சிச் சித்ரத்திருமார்பா
கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறுகைக்குக் கற்புத்தவறாதே
கம்பை யாற்றினி லன்னை தவம்புரிகச்சிச் சொக்கப்பெருமாளே.
