பாடல் 336
அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக்
- தலம்
- காஞ்சீபுரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத்தனனத்தத் தனனத்தத்தனதான
பாடல் வரிகள்
அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக்கணுரத்தைக் கனவெற்புத்தனமேகம்
அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித்திளகிக்கற் புளநெக்குத்தடுமாறித்
துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத்தொடியர்க்கிப் படியெய்த்துச்சுழலாதே
சுருதிப்பொற் பொருள்செக்கர்க் குரவிட்டுத் தமர்பற்றித்தொழுசெச்சைக் கழல்பற்றிப்பணிவேனோ
புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப்புனமுத்தைப் புணர்சித்ரப்புயவீரா
புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப்புகல்பொற்குக் குடவெற்றிக்கொடியோனே
கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக்கரணிச்சித் தருள்கச்சிப்பதியோனே
கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப்பொருசத்திக் கரசொக்கப்பெருமாளே.
