பாடல் 309
அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ்
- தலம்
- காஞ்சீபுரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதான
பாடல் வரிகள்
அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ்சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங்கணைதருஞ் செச்சைப் பொற்புய னத்தன்குறவாணார்
அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென்றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண்டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன்குமரேசன்
துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங்களைபவன் பச்சைப் பக்ஷிந டத்துந்துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துன்புகழ்பாடிச்
சுருதியின் கொத்துப் பத்தியு முற்றுந்துரியமுந் தப்பித் தத்வம னைத்துந்தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும்படிபாராய்
கதிபொருந் தக்கற் பித்துந டத்துங்கனல்தலம் புக்குச் சக்ரமெ டுக்குங்கடவுளும் பத்மத் தச்சனு முட்கும்படிமோதிக்
கதிரவன் பற்குற் றிக்குயி லைத்திண்சிறகரிந் தெட்டுத் திக்கர்வ குக்குங்கடகமுந் தட்டுப் பட்டொழி யக்கொன்றபிராமி
பதிவ்ரதம் பற்றப் பெற்றம கப்பெண்பரிவொழிந் தக்கிக் குட்படு தக்கன்பரிபவம் பட்டுக் கெட்டொழி யத்தன்செவிபோயப்
பணவிபங் கப்பட் டப்படி வெட்கும்படிமுனிந் தற்றைக் கொற்றம்வி ளைக்கும்பரமர்வந் திக்கக் கச்சியில் நிற்கும்பெருமாளே.
