பாடல் 306
வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
- தலம்
- குன்றுதோறாடல்
- ராகம்
- தோடி
- தாளம்
- அங்கதாளம் (5) (திஸ்ர ரூபகம்)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2தந்தன தான தான தந்தன தான தானதந்தன தான தானதனதான
பாடல் வரிகள்
வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடிமஞ்சரி கோவை தூதுபலபாவின்
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறிவந்தியர் போல வீணிலழியாதே
செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலைதிண்டிறல் வேல்ம யூரமுகமாறும்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறுசெங்கனி வாயி லோர்சொலருள்வாயே
பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடுபஞ்சற வாது கூறுசமண்மூகர்
பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோதுபண்டித ஞான நீறுதருவோனே
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவுகுன்றவர் சாதி கூடிவெறியாடிக்
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறுகுன்றுதோ றாடல் மேவுபெருமாளே.
